மே 1ம் தேதி ஊரடங்கு இல்லை : தமிழ்நாடு அரசு

Apr 29, 2021 01:36 PM 5432

மே 1ம் தேதி ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மே தினம் என்பதால் மே 1 விடுமுறையில் ஊரடங்கு அவசியமில்லை. 

 

அதுபோக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாம் துவங்க உள்ளதால் அவர்களை தடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதனையடுத்து மே 1 ம் தேதி ஊரடங்கு அறிவிப்பதா? வேண்டாமா என அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஊடகங்களுக்கு அனுமதிப்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைத்தது. 

Comment

Successfully posted