வேட்பு மனுவை தாக்கல் செய்தார் தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தனது

Mar 22, 2019 05:19 PM 534

நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக 20 மக்களவை தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் மீதமுள்ள 20 தொகுதிகளிலும் களம் காண்கின்றன.

இந்த நிலையில், தென்சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அடையாறில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் அவர் மனு தாக்கல் செய்தார். எம்.எல்.ஏ.க்கள் நடராஜ், விருகை ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

Comment

Successfully posted