தமிழகத்தில் நாளை மறுதினம் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு

Oct 18, 2018 08:36 PM 506

தமிழகத்தில் நாளை மறுதினம் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவித்தார்.

ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் அவர் குறிப்பிட்டார். தென்மேற்கு பருவமழை வரும் 20 ஆம் தேதியுடன் முடியும் என்றும் வடகிழக்கு பருவமழை அன்றைய தினமே தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுவதாகக் தெரிவித்தார்.

அதிகபட்சமாக சென்னை விமான நிலையம் , வேலூர் மற்றும் விரிஞ்சிபுரத்தில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக ஸ்டெல்லா கூறினார். 

Comment

Successfully posted