கொடுமைப்படுத்தும் மகன்கள் - சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்கும் தந்தை

Oct 02, 2020 11:44 AM 699

கடலூர் அருகே அடித்து துன்புறுத்தும் மகன்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டு, சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்க வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பேரூர் கிராமத்தில் வசித்து வருபவர் சம்பந்தம். இவர் தனக்கு சொந்தமான அனைத்து நிலம், மனை, பொருட்கள் உள்ளிட்டவைகளை தனது மகன்கள் பெயரில் எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்ட மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், தன்னிடம் சொத்துக்கள் ஏதும் இல்லாத நிலையில், தனது மகன்கள் அடித்து துன்புறுத்துவதாகவும், தனது சொத்துகளை மகன்களிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார். மேலும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதியும் கேட்டுள்ளார்.

இதையடுத்து, முதியவரை சமாதானப்படுத்திய காவல் கண்காணிப்பாளர், பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று கூறி அனுப்பி வைத்தார்.

Comment

Successfully posted