174 நாட்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!

Oct 16, 2020 06:47 AM 492

தமிழகத்தில் 174 நாள்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், 6 மாதங்களுக்கு சாலை வரி விலக்கு அளிக்கப்பட்ட பின்புதான் பேருந்துகளை இயக்குவோம் என்று ஆம்னி உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அவர்களது கோரிக்கையை போக்குவரத்து துறை ஏற்றதை அடுத்து, ஆம்னி பேருந்துகளை இயக்க உரிமையாளர்கள் முன்வந்தனர்.

அதன்படி, தமிழகத்தில் 174 நாட்களுக்கு பிறகு இன்று முதல் 60 சதவீத பயணிகளுடன் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Comment

Successfully posted