உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கும் மலர்கள்

Apr 24, 2019 09:11 AM 402

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கும் மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இருக்கும் கண்ணாடி மாளிகையில், குறைந்த சூரிய ஒளியில் வளரும் மேலை நாடுகளைச் சேர்ந்த மலர் செடிகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பெரணி செடிகள், மூலிகை தாவரங்கள், பல்வேறு வண்ணங்களில் பூத்திருக்கும் கள்ளிச் செடிகள் என பல வகையான தாவரங்கள் உள்ளன.

கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், கண்ணாடி மாளிகையில் இத்தாலியன் ஆர்னமென்டல் கேர்ள் வகை செடிகள், கள்ளிப் பூக்கள் புது நிறத்துடன், பூத்து குலுங்குகின்றன. இவை சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகின்றன. மே மாதம் நடைபெறவுள்ள மலர்
கண்காட்சிக்காக, கண்ணாடி மாளிகையில் பராமரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

Comment

Successfully posted