தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

Jan 20, 2020 10:55 AM 101


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வரும் 22,23 ஆகிய தேதிகளில் நெல்லை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், அதிகாலை நேரங்களில் லேசான பனிப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted