'ஒரு குட்டி கதை' பாடலை பாடியது விஜயா? ட்வீட் போட்ட படக்குழு

Feb 12, 2020 05:38 PM 711

கைதி படத்தை இயக்கி வெற்றி பெற்ற லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது.இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார் மற்றும் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். மேலும் ஆண்ட்ரியா சாந்தனு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் வருமான வரித்துறை போன்ற சம்பவங்கள் மாஸ்டர்  படத்தின் படப்பிடிப்பிற்கு சற்று தடையாக இருந்தது.அதனைத் தொடர்ந்து ரசிகர்களுடன் விஜய் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

இந்நிலையில் நேற்று மாஸ்டர் படத்தின் படக்குழு ஒரு குட்டி கதை சொல்லட்டுமா என்ற பாடல் காதலர் தினமான பிப்ரவரி 14 மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்து இருந்தது. தற்போது இந்தப் பாடலை பாடியது உங்கள் மனதிற்கு நெருக்கமானவர் தான்  யாரென்று கண்டுபிடியுங்கள் என படக்குழுவினர் ட்வீட் செய்திருந்தனர். இதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் விஜய் தான் எங்களின் மனதுக்கு நெருக்கமானவர் 'தளபதி தான் வேற யாரு' என கமெண்ட் செய்தனர்.

ரசிகர்கள் கூறியது போலவே இந்த பாடலை பாடியது விஜய் தான் என்று படக்குழுவினர் புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

 

Comment

Successfully posted