தனி ஒருவனாய் சாதித்த பார்த்திபன் : விரைவில் ’ஒத்த செருப்பு’

Sep 11, 2019 05:46 PM 290

இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபன், தானே இயக்கி நடிக்கும் படமான ’ஒத்த செருப்பு’ செட்பம்பர் 20ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

’தனி ஒருவன் நினைத்து விட்டால் இந்த உலகத்தில் தடைகள் இல்லை’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தனி ஒருவனாய் நின்று தானே இயக்கி, தயாரித்து, பார்த்திபன் நடித்துள்ள படம் தான் ஒத்த செருப்பு.இந்த படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் தான்.பொதுவாக படங்களில் நிமிடத்திற்கு நிமிடம் பல கதாபாத்திரங்கள் திரையில் வந்து போக, பார்த்திபன் மட்டுமே இந்த படம் முழுவதும் நடித்திருப்பது பாராட்டத்தக்கது.

ஒரு தனி மனிதன் வீட்டில் மாட்டிக்கொண்டு அவன் சந்திக்கும் திகில் சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டிக்கலாம் என திரை வட்டாரங்களில் கூறப்படுகிறது.நிச்சயமாக ஒத்த செருப்பு திரைப்படம் உலக சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும் படமாக அமையும்.திரைப்படம் வெளியாவதற்கு முன்பே india book of records, asia book of records என பல விருதுகளை பெற்று, மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் செப்டம்பர் 20ம் தேதி உலகம் முழுவதும் ஒத்த செருப்பு திரைப்படம் வெளியாகவுள்ளது.

Related items

Comment

Successfully posted