முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

Dec 15, 2019 12:24 PM 596

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், மாற்று கட்சிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

அமமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் அந்த கட்சிகளில் இருந்து விலகினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர்கள் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினரை முதலமைச்சர் வரவேற்று, உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் இணைந்ததாக மாற்றுக்கட்சியினர் தெரிவித்தனர்.

Comment

Successfully posted