அவல நிலையில் ஆக்சிஜன் செறிவூட்டி - ஆளும் அரசின் அலட்சியப்போக்கு!!

Jun 25, 2021 08:58 PM 988

கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் ஆக்ஸிஜன் செறிவூட்டி எந்திரங்கள் குப்பை போல் குவித்து வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

image

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் பலரும் உயிரிழப்பை சந்தித்த நிலையில், மனிதாபிமான முறையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், தனியார் தொண்டு நிறுவனங்களும் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை, கோவை அரசு மருத்துவமனைக்கும், மாவட்ட ஆட்சியரிடமும் வழங்கினர்.

image

இதன் மூலம் மக்கள் பயன்பெற்று வந்த நிலையில், தற்போது கோவை அரசு கலைகல்லூரி வளாகத்தில், ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகள் குப்பைபோல் குவித்து வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

image

கொரோனா மூன்றாம் அலையின் முன்னேற்பாடுகளில், ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை பாதுகாப்பாக வைப்பது குறித்து கவலைப்படாத மாவட்ட நிர்வாகத்தின் செயல், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

image

Comment

Successfully posted