மசூலிப்பட்டினம்-காக்கிநாடா இடையே நாளை கரையைக் கடக்கிறது பெய்ட்டி புயல்

Dec 16, 2018 01:15 PM 359

பெய்ட்டி புயல் சென்னைக்கு தென்கிழக்கே 490 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் நிலை கொண்டுள்ள பெத்தாய் புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னைக்கு கிழக்கு, தென் கிழக்கே 490 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள புயல் சின்னம், மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - காக்கிநாடா இடையே நாளை பிற்பகலில் புயல் கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, வட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

Comment

Successfully posted