கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எப்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்?

May 20, 2021 10:06 AM 1253

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள், 3 மாதங்களுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தேசிய தடுப்பூசி நிர்வாக வல்லுநர் குழு அளித்த புதிய பரிந்துரைகளின் படி, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை, 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு மற்றும் உலகளாவிய அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில், இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பாலூட்டும் பெண்கள் அனைவரும் நிச்சயமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Comment

Successfully posted