``ரெம்டெசிவிர் மருந்து வாங்க கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்க வேண்டும்”

May 04, 2021 04:17 PM 468

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நீண்ட வரிசையில் நின்று ரெம்டெசிவிர் மருந்தை பொதுமக்கள் வாங்கிச் செல்லும் நிலையில், கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் பலருக்கும் ரெம்டெசிவிர் மற்றும் ஆக்டெம்ரா உள்ளிட்ட மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையம் மூலம் ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்கப்படுகிறது. மருத்துவர் பரிந்துரை சீட்டுகளுடன் வருவோருக்கு சிறப்பு கவுன்ட்டர்கள் மூலம் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுகிறது. ரெம்டெசிவிர் மருந்தை வாங்க, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மக்கள் விடிய விடிய காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதல் கவுன்ட்டர்கள் அமைத்து ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted