அறிவிக்கப்படாத மின்வெட்டால் அவதிப்படும் மக்கள்

Jun 05, 2021 05:06 PM 841

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் பல பகுதிகளில் மீண்டும் மின்வெட்டு தலை தூக்க தொடங்கி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை, இலுப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 6 முறை மின் வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலையில், அடிக்கடி ஏற்படும் இந்த அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Comment

Successfully posted