ட்விட்டரில் ட்ரெண்டாகும் kaviliya ஹேஸ்டேக்..கவின்,லாஸ்லியாவுக்கு எகிரும் support..

Oct 06, 2019 04:52 PM 3161

பிக்பாஸ் நிகிழ்ச்சியில் இளைஞர்களால் ரசிக்கப்பட்ட ஜோடி கவின் -லாஸ்லியா என்றே கூறலாம்.வீட்டில் உள்ள அனைவரும் இவர்கள் மீது குற்றச்சாட்டு வைத்தாலும், இருவருமே அவர்களின் மனதில் படுவதை வெளிப்படையாக பேசினர்.அதுவே பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த ஒன்றாகும்.

பின்பு லாஸ்லியா தந்தை வீட்டிற்கு வந்த போது, அவர் லாஸ்லியவை சரமாரியாக கேள்வி கேட்டார்.அப்போது கவினுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் உடைந்து போனார்.அடுத்தடுத்த வாரங்களில் இருவருமே பெற்றோர்களுக்காக தங்களின் காதலை மறைத்தனர்.பின்பு கவின் வெளியே சென்றுவிட, இறுதி போட்டியாளராக இன்று வரை லாஸ்லியா வீட்டில் இருக்கிறார்.

பிக்பாஸ் நிகிழ்ச்சியின் வெற்றியாளர் யார் என இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், கவின் மற்றும் லாஸ்லியாவுக்கு support-ஆக ட்விட்டரில் kaviliya என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.அதில் பலரும் தங்களின் கருத்துகளை கூறி வருகின்றனர்.

 

 

 

 

தற்போது லாஸ்லியா மற்றும் முகெனுக்கு பிக்பாஸ் 3 டைட்டிலை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகிவுள்ளது.

Comment

Successfully posted