சாலையோரத்தில் தங்க காசுகள் - ஓசூரில் குவிந்த மக்கள்!

Oct 11, 2020 11:24 AM 7201

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சாலையோரத்தில் இருந்து நேற்று இரண்டாவது நாளாக தங்காசுகளை பொதுமக்கள் எடுத்து சென்றனர்.


ஒசூர் அருகே பாகலூர் - சர்ஜாபுரம் சாலையில் உள்ள புதரில், சிறிய அளவிலான தங்கக்காசுகளை பொதுமக்கள் சிலர் எடுத்துள்ளனர். இதுகுறித்த தகவல் பரவ, பலரும் அப்பகுதியில் தங்ககாசுகளை தேடும் முயற்சியில் இறங்கினர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த தங்ககாசுகளில் உருது எழுத்துகள் இருப்பதாகவும், இது 1 கிராம் அளவில் இருப்பதாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில் நேற்றும் தங்ககாசுகளை எடுக்க பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்திருந்த தங்க காசுகளை கைகளால் தோண்டி எடுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தங்க காசுகளை அங்கு வீசி சென்றது யார் என்பது குறித்து காவல்துறையினர் விரைந்து விசாரணை நடத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted