ஊழலற்ற நேர்மையானவர்களையே மக்கள் விரும்புகின்றனர்: வேட்பாளர் சாம்பல்

Mar 30, 2019 11:56 AM 126

புதிய வேட்பாளர்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக மத்திய சென்னை வேட்பாளர் சாம்பால் தெரிவித்துள்ளார்.

சென்னை செனாய் நகர், டி.பி. சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய சென்னை அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் சாம்பால் வாக்குசேகரித்தார். அப்போது, அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். நாடளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். விஜயகுமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாமக வேட்பாளர் சாம்பால், ஊழல் அற்ற, நேர்மையானவர்களையே மக்கள் விரும்புவதால் புதிய வேட்பாளர்களுக்கு வரவேற்பு இருப்பதாக தெரிவித்தார்.

Comment

Successfully posted