பிரபல ரவுடி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை

Jan 18, 2020 10:31 AM 644

சென்னை பெரம்பூரில் பிரபல ரவுடியை வீடு புகுந்து, வெட்டிக் கொன்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


பெரம்பூரை சேர்ந்த சந்தோஷ்குமார், தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்திகளால் தாக்க முயன்றுள்ளனர்.

அவர்களிடமிருந்து தப்பி ஓடிய சந்தோஷ்குமார், தனது வீட்டிற்குள் ஓட, அவரை பின்தொடர்ந்த மர்ம கும்பல், வீடு புகுந்து அவரை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ்குமார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், சந்தோஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், 6 பேர் கொண்ட மர்ம கும்பலையும், கொலைக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Comment

Successfully posted