பெரியார் சிலை அவமதிப்பு - திருச்சி, மணிகண்டம் அருகே இனாம்குளத்தூரில் விசமிகள் வெறிச்செயல்

Sep 27, 2020 09:54 AM 475

திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட இனாம்குளத்தூர் ஊராட்சியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. அங்குள்ள பெரியாரின் மார்பளவு சிலை மீது, மர்ம நபர்கள் காவி சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்து சென்றுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், மணிகண்டம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பெரியார் சிலை மீது பூசப்பட்டு இருந்த காவி சாயத்தை அகற்றினர். இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதனிடையே, பெரியார் சிலை அமதிக்கப்பட்டதைக் கண்டித்தும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சிலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Comment

Successfully posted