வழக்கம் போல் இன்றும் உயர்ந்த பெட்ரோல் விலை ; விலை சரிவை கண்ட டீசல்!

Jul 12, 2021 06:07 PM 4568

தமிழ்நாட்டில், பெட்ரோலின் விலை வழக்கம் போல் உயர்ந்துள்ள நிலையில், வழக்கத்துக்கு மாறாக டீசலின் விலை இன்று குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விற்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 25 காசுகள் அதிகரித்து 101 ரூபாய் 92 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் 104 ரூபாய் 54 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 96 ரூபாய் 52 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

நீலகிரி, மயிலாடுதுறை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டிணம், திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும், ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று டீசல் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted