இங்கிலாந்து இளவரசர் பிலிப் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது

Jan 18, 2019 11:33 PM 252

இங்கிலாந்து இளவரசர் பிலிப் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இளவரசர் பிலிப் காயமின்றி உயிர் தப்பினார்.

இளவரசர் பிலிப்-க்கு வயது 97. கிழக்கு இங்கிலாந்தின் சாண்ட்ரிகாம் எஸ்டேட் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

பிலிப் சென்ற கார் சாலை வளைவின் போது கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

காரில் சென்ற இளவரசருடன் மேலும் 2 பேர் இருந்தனர். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் இளவரசருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும், அவருக்கு எவ்வித மருத்துவ உதவியும் தேவைப்படவில்லை என்றும் பங்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இளவரசர் பிலிப்பின் 98ஆவது பிறந்த தினத்துக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற விபத்திலிருந்து ஒருவர் எவ்வித காயமுமின்றி தப்புவது ஆச்சர்யத்துக்குரிய விஷயம் என்று பலரும் கூறுகின்றனர்.

அதற்கும் முன்பாக, இந்த வயதிலும் இளவரசர் பிலிப் கார் ஓட்டுவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Comment

Successfully posted