ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 17 பேர் கைது!

Oct 06, 2020 05:05 PM 558

ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, பெங்களூரு, ஹைதராபாத், மும்பையில், 17 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒரு புறம் ஐ.பி.எல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியா முழுவதும் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான கைது நடவடிக்கையும் பரபரப்பாக நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக, தெலங்கானா மாநிலம் பசீராபாத் பகுதியில், செயலி மூலம் சூதாட்டம் நடத்தி வந்த 8 பேர் கொண்ட கும்பலை, காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 22 லட்சம் ரூபாயையும், 8 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். ஹைதராபாத்தில் மட்டும் 730 கோடி ரூபாய் அளவிற்கு கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்று இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேபோல், மும்பையில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனிடையே, பெங்களூருவில், சூதாட்டம் தொடர்பாக 4 பேரை கைது செய்த காவல்துறையினர், லேப்டாப்கள் மற்றும் செல்போன்களை கைப்பற்றினர்.

Comment

Successfully posted