சொகுசு விடுதி உரிமையாளரை ஏமாற்றி கோடிக்கணக்கிலான பணம் கொள்ளை!

Sep 16, 2020 04:15 PM 475

பொள்ளாச்சி அருகே சொகுசு விடுதி உரிமையாளரை ஏமாற்றி 1,72,50,000 ரூபாய் மோசடி செய்த கேரளாவை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த சொகுசு விடுதி உரிமையாளரான முத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நண்பர் அனுபுகுமாரிடம் 1,72,50,000 ரூபாயை கேரளாவில் உள்ள வங்கி லாக்கரில் வைக்குமாறு, கொடுத்துள்ளார். ஆனால் அனுபுகுமார் பணத்துடன் தலைமறைவான நிலையில், முத்து அளித்த புகாரின் பேரில், செம்மனாம்பதி பகுதியில் உள்ள தோட்டத்தில் பதுங்கியிருந்த அனுபுகுமாரின் நண்பர்கள் 5 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள அனுபுகுமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted