பள்ளி மாணவி மாய்த்துக்கொண்ட வழக்கில் கொலையாளி கைது!

Sep 25, 2020 08:57 AM 418

சென்னையில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தரமணியை சேர்ந்த நாகராஜன் என்பவரின் 12 வயது மகள் கடந்த ஜூன் மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நாகராஜன் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த குணசீலன் என்பவரின் செல்போனை கைபற்றிய காவல்துறையினர், அதில் தற்கொலை செய்துக்கொண்ட சிறுமியின் ஆபாசப்படம் மற்றும் ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

குணசீலன் கொடுத்த தொடர் பாலியல் ரீதியான தொந்தரவால், சிறுமி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதை காவல்துறையினர் உறுதி செய்தனர். இந்நிலையில், வால்பாறையில் பதுங்கியிருந்த குணசீலனை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பாலியல் உறவுக்காக சிறுமியை மிரட்டியதை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related items

Comment

Successfully posted