காவல்துறையில் 10,906 காலிப்பணியிடங்கள் - ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

Sep 17, 2020 04:13 PM 327

காவல்துறையில் காலியாக உள்ள 10,906 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் அறிவித்துள்ளது.

இந்த பணியிடங்களுக்காக, செப்டம்பர் 26-ம் தேதி முதல் அக்டோபர் 26-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், டிசம்பர் 13-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர்களுக்கு 3,099 பெண்கள், 685 ஆண்கள் என 3,784 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு 6,545 பேரும், சிறைத் துறையில் இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு 119 பேரும் தேர்வு செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்தேர்வில் பங்கேற்க 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 10-ம் வகுப்பில் தமிழை ஓர் மொழிப்பாடமாக படித்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted