சென்னை முகப்பேரில் கடத்தப்பட்ட குழந்தை திருப்பதியில் மீட்பு - முறையற்ற உறவால் நிகழ்ந்த விபரீதம்

Jul 07, 2021 05:56 PM 702

சென்னையில் கடத்தபட்ட குழந்தையை திருப்பதியில் மீட்ட காவல்துறை. முறையற்ற உறவால் பந்தாடப்பட்ட குழந்தை


சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன்(60) இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி அம்சாவிற்கு கலைவாணி என்ற மகளும் செந்தில்நாதன் என்ற மகனும் உள்ளனர்.அதேபோல் இரண்டாவது மனைவி சத்தியா, சதிஷ்குமார்,சங்கர் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். முதல்மனைவி அம்சாவின் மகள் கலைவாணி முகப்பேர் பகுதியில் மகன் சக்திகாந்த் மற்றும் மகள் ரக்சிதா ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு குடிபோதையில் கலைவாணி வீட்டிற்கு வந்த தந்தையின் இரண்டாவது மனைவி மகன் சதிஷ்குமார் கலைவாணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.பின்னர் தாய் கன்முன்பே மூன்று வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றுள்ளார்.இது குறித்து சிறுமியின் தாய் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து ஜெ.ஜெ.நகர் காவல்துறையினர் சதிஷ்குமாரை தேடி வந்த நிலையில் செல்போன் சிக்னல்களை வைத்து திருப்பதியில் பதுங்கி இருந்த சதீஷ்குமாரை கைது செய்து குழந்தயை பத்திரமாக மீட்டனர்.

விசாரணையில் கலைவாணி மற்றும் சதீஷ்குமார் இடையே முறை தவறிய உறவு இருந்துள்ளதும். இதனால் கலைவாணியின் கணவன் பிரிந்து சென்றதாகவும், இந்நிலையில் கலைவாணி வேறு ஒருவருடன் பேசி வருவதால் தன்னை நெருங்க விடுவது இல்லை எனவும் இதன் காரணமாக மதுபோதையில் தன்னுடன் வந்து குடும்ப நடத்த வேண்டும் என அழைத்துள்ளதும் அதில் ஏற்பட்ட தகராறு காரணமாக தூங்கி கொண்டிருந்த குழந்தையை கடத்தி சென்றதும் தெரியவந்துள்ளது..

திருப்பதியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தபோலீசார் கடத்தல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Comment

Successfully posted