சட்டப்பேரவைத் தேர்தலில் தோராயமாக 71.79% சதவீத வாக்குகள் பதிவு!

Apr 06, 2021 09:32 PM 535

சட்டப்பேரவைத் தேர்தலில் தோராயமாக 71 புள்ளி 79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தமிழ்நாட்டில் தோராயமாக 71 புள்ளி 79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதமும், குறைந்தபட்சமாக சென்னையில் 59 புள்ளி 40 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

Comment

Successfully posted