கன்னியாகுமரிக்காக எதிர்க் கட்சிகள் சிறுதுரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை : பொன்.ராதாகிருஷ்ணன்

Mar 22, 2019 05:16 PM 222

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்காக எதிர்க் கட்சிகள் சிறுதுரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என குமரி நாடாளுமன்ற பாஜக வேட்பாளரான பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே
கட்டமாக நடைபெறயிருக்கிறது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு அதிமுக கூட்டணிக் கட்சியினர் உற்சாக வரவேற்பு வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், குமரி நாடாளுமன்ற தொகுதிக்காக எதிர்க்கட்சிகள் சிறுதுரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என குற்றம்சாட்டினார்

Comment

Successfully posted