இத மட்டும் ப்ளீஸ் பண்ணுங்க..விஜய்,அஜித்துக்கு வேண்டுகோள் விடுத்த பிரபல இயக்குனர்

Dec 31, 2019 02:27 PM 747


புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் விபத்தில்லா புத்தாண்டை கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.மேலும் அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள் உள்பட பலரும் புத்தாண்டை முன்னிட்டு தங்களின் வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான சுசீந்திரன் விபத்தில்லா புத்தாண்டை கொண்டாடும் படி கூறி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில் ‘இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடக்கும் விபத்தில் யாரும் மரணமடைய கூடாது.இதுவரை நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் பல்லாயிரகணக்கானோர் மரணம் அடைந்துள்ளனர்.என் அன்பான வேண்டுகோள் ரஜினி sir , கமல் sir , அஜித் sir , விஜய் sir உங்களை இவ்வளவு உயரத்தில் தூக்கி பிடித்திருக்கும் உங்களது ரசிகர்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும்படி கேட்டுகொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

image


மேலும் இயக்குனர் சுசீந்திரன் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க தீவிரமாக கதை எழுதிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted