அம்மா உணவகத்தில் உள்ள அம்மாவின் திருவுருவ படங்கள் மறைப்பு

Jun 28, 2021 08:54 PM 1163


தென்காசி அம்மா உணவகத்தில் திமுகவினரின் காழ்ப்புணர்சியால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படமும் தமிழக மக்களின் உணர்வில் கலந்த அம்மா என்ற பெயரும் மறைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகம், இன்றுவரை பல ஏழை எளிய மக்களின் பசி போக்கும் இடமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தென்காசியில் உள்ள அம்மா உணவகத்தில் அப்பகுதி திமுகவினரின் குறுக்கீட்டால் மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா திருவுருவப்படம் மற்றும் அவரது பெயர் ஆகியவை மறைக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகம் போன்ற தொலை நோக்கு பார்வையுடன் ஒரு மக்கள் நலத் திட்டத்தை தொடங்க இயலாத திமுக, குறுகிய மனப்பான்மையுடன் பல்வேறு இடங்களில் செய்து வரும் இது போன்ற செயல்கள் பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted