ராணிப்பேட்டை தனியார் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

Jan 13, 2020 05:39 PM 804

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த வடமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மூன்று பானைகளில் பொங்கலிட்டு, கரும்பு, மஞ்சள் வைத்து, சூரிய வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது, பொங்கலோ, பொங்கல் என குலவையிட்டு, ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், உற்சாகம் பொங்க கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் கோலப்போட்டிகள், உரியடித்தல், கயிறு இழுத்தல், மயிலாட்டம், ஒயிலாட்டம், கபடி போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகள் பல வண்ண புத்தாடைகள் அணிந்து மகிழ்ச்சியுடன் விழாவில் கலந்து கொண்டனர். அனைவருக்கும், பொங்கல், கரும்பு வழங்கப்பட்டது.

Comment

Successfully posted