இலங்கை யுத்தத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்க முயற்சிக்காத தமிழ் தேசியக்கட்சிகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

Jun 02, 2019 10:03 AM 216

இலங்கை இறுதி யுத்தத்தின் போது மாயமானவர்களை கண்டுபிடிக்க எந்தவித முயற்சியும் செய்யாத தமிழ் தேசியக் கட்சிகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியின் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காணாமல் போனவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர். போர் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆன போதிலும் காணாமல் போனவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அறியப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இந்த விசயத்தில் அக்கறை காட்டவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர். தமிழ் தேசியக் கட்சிகளுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Comment

Successfully posted