தேர்வு தாள் திருத்தும் முறையை மாற்றக்கோரி போராட்டம்

Sep 06, 2021 05:11 PM 907

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தேர்வு தாள் திருத்தும் முறையை மாற்றக்கோரி விடுபட்ட பாட தேர்வை எழுத வந்த ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வு செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருமங்கலத்தில் அரியர் தேர்வை எழுத வந்த மாணவிகள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். இறுதி தேர்வில் தொடர்ந்து ஒற்றை எண்ணில் மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக அப்போது அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதனால் தேர்வு தாள் திருத்தும் முறையை மாற்றக்கோரி தேர்வை புறக்கணித்த மாணவிகள் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Comment

Successfully posted