திமுக சாலை மறியல் - அவதிக்குள்ளான பொதுமக்கள்!

Nov 21, 2020 10:13 AM 928

உதயநிதி ஸ்டாலினை விடுவிக்கக் கோரி, நாமக்கல்லில் திமுகவினர் தடையை மீறி மறியலில் ஈடுபட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி, திருக்குவளையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை காவல்துறை கைது செய்தது. இந்நிலையில், அவரை விடுதலை செய்யக்கோரி நாமக்கல்லில், மணிக்கூண்டு அருகே திமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் திமுகவினர் முகக்கவசம் அணியாமலும், பாதுகாப்பு இடைவெளியை கடைப்பிடிகாமலும் பங்கேற்றனர். மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

Comment

Successfully posted