டாஸ்மார்க் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுப்பாட்டில் வாங்க குவிந்த மதுப்பிரியர்கள்

May 08, 2021 03:35 PM 580

புதுக்கோட்டையில் டாஸ்மார்க் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுப்பாட்டில்களை வாங்க மதுப்பிரியர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

தமிழகம் முழுவதும் வரும் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தபட உள்ளது.

முழு ஊரடங்கின் போது மதுக்கடைகள் செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கிற்கு முன்னதாக இன்றும் நாளையும் மதுக்கடைகள் காலை 8 மணி முதல் மாலை 6மணி வரை செயல்படும் என்ற அறிவிப்பை அடுத்து, டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர்.

சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுபாட்டில்களை வாங்குவதில் மதுப்பிரியர்கள் ஆர்வம் காட்டினர்.

இதனை மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளாததால் கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்

Comment

Successfully posted