குண்டு வெடிப்புக்கு கடும் கண்டனம், மக்கள் அமைதி காக்க வேண்டும் - பஞ்சாப் முதலமைச்சர் வலியுறுத்தல்

Nov 18, 2018 08:24 PM 620

பஞ்சாப் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், நிரன்காரி பவனில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்த தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறியிருக்கும் அமரிந்தர் சிங், பஞ்சாப் மக்கள் அமைதி காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்றும் தனது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Comment

Successfully posted