ரஜினியுடன் த்ரிஷா சாமி தரிசனம்

Oct 13, 2018 02:16 PM 998

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, த்ரிஷா, சசிகுமார், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட. இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இளம் இசையமைப்பாளரான அனிருத் இசையக்கிறார்.

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கடவுளுடன் கடவுளை தரிசித்தேன் என தலைப்பிட்டு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். ரஜினியுடன் சாமி தரிசனம் செய்த புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. இந்த படம் த்ரிஷா - ரஜினி இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted

Super User

வரவேற்கிறோம் நல்ல பக்தி மார்க்கம் மனம் உள்ளவர்


Super User

ஆன்மீக அனுபவங்கள் உடையவர்