இந்திய கிரிக்கெட் அணிக்கு குடியரசு தலைவர் வாழ்த்து

Jan 07, 2019 12:57 PM 236

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை தொடரை வென்றதையடுத்து குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இதனையடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் உள்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், தொடரை வென்றதற்கு கேப்டன் கோலி மற்றும் அணியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார். சிறப்பான பேட்டிங், அற்புதமான பந்து வீச்சு மற்றும் அணியின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி பெருமையளிப்பதாகவும், இதுதொடர வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

Comment

Successfully posted