சேதமைடைந்த காய்கறி கடைகளுக்கு பதில் ரூ.2.37 கோடி செலவில் புதிய கடைகள் கட்டப்படும் - சேவூர். எஸ்.ராமச்சந்திரன்

Nov 30, 2018 09:51 PM 322

ஆரணி நகராட்சியில் தொடர்மழையினால் சேதமடைந்த காய்கறி கடைகள் 2 கோடியே 37 லட்சம் செலவில் புதிதாக கட்டப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.எஸ். இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர் மழையின் காரணமாக ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட காந்தி காய்கறி மார்கெட் கடைகள் கடுமையாக சேதமைடைந்தன. இதனால், வியாபாரம் செய்ய இடம் இல்லாமல் வியாபாரிகளும் காய்கறிகளை வாங்கமுடியாமல் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.எஸ். ராமச்சந்திரன் மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்து நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் ஆரணி நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள பகுதியில் தற்காலிகமாக காய்கறி மார்க்கெட் அமைக்க அனுமதி வழங்கினார்.


Comment

Successfully posted