கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

Apr 30, 2021 07:18 PM 1226

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையில் பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்று வெளியிடப்பட்டவை, கருத்து திணிப்பு என்று கூறியுள்ளார். தொகுதிக்கு 200 பேரிடம் கருத்துக்களை கேட்டுவிட்டு கருத்து கணிப்பு முடிவுகள் என்று வெளியிடுவதாக தெரிவித்த அவர், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எந்த காலத்திலும் எடுபட்டதில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

மக்கள் பேராதரவோடு அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted