மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு

May 25, 2019 11:23 AM 47

11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில் சிலர் மறுகூட்டல், மற்றும் மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தனர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் மதியம் 2 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. அதன்படி scan.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் பதிவு எண் பட்டியலில் மறுகூட்டல், மறுமதிப்பீடிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் பதிவு எண் இடம் பெறவில்லை என்றால் அவர்களது விடைத்தாளில் எந்தமாற்றமும் இருக்காது. அதேசமயம் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் 27ஆம் தேதி மதியம் 2 மணி முதல் www.dge.tn.nic.in என்ற இணையத்தில் தங்களது திருத்தப்பட்ட தற்காலிக மதிப்பெண் பட்டியலை பதவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

Comment

Successfully posted