ராக்கியை வெளியிடும் நயன்தாரா - விக்னேஷ் சிவன்

Jun 02, 2021 12:05 PM 5126

தரமணி நடிகர் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ராக்கி. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ராக்கி (Rocky) படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகை நயன்தாரா (Nayanthara) மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் (Vignesh Shivan) ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. சமீபத்தில், இப்படத்தின் டீசர் வெளியாது. மேலும் அந்த டீசர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால், கொரோனா 2-வது அலை பரவல் தமிழகத்தில் தீவிரமடைந்து, திரையரங்குகள் மூடப்பட்டு ரிலீஸ் பனிகள் நின்று போயின.


இந்நிலையில் தற்போது இந்த படம் ஓடிடி தளமான சோனி லைவில் வெளியாகவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, சோனி லைவ்வில் விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘வாழ்’, கார்த்திக் நரேனின் ‘நகரகாசூரன்’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted