youtube-ஐ தெறிக்கவிட்ட ரௌடி பேபி

Feb 13, 2019 03:28 PM 562

தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல வளர்ந்து உச்சம் தொட்டவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல. ஆனால் நிலைத்து நிற்பவர்கள் வெகு குறைவே.

19ம் நூற்றண்டின் முதல் சினிமா முதல் 21 ம் நூற்றாண்டின் இன்றைய சினிமா வரை எவ்வளவோ மாறிவிட்டாலும் மாறாத ஒரே விடயம் சினிமா வரவேற்பாளர்களின் கொண்டாட்ட மனநிலைதான்.

புதிய புதிய ட்ரெண்ட் செட்டர்கள் வந்தும் போயும் இருக்கும் தமிழ் சினிமாவில் தற்போதைய ட்ரெண்ட் செட்டர் தனுஷ்தான்.

யூட்யூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளை மிகவிரைவில் எட்டிய பாடல் “ஒய் திஸ் கொலவெறி” பாடல்.

இப்போது மாரி-2 படத்தில் யுவன் இசையில் எல்லோருடைய செல்பேசிகளிலும் ஒலித்த ரௌடிபேபி பாடல் 200 மில்லியன் பார்வைகளை எட்டி இன்னொரு சாதனையை செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து முனுமுனுக்கும் பாடல்கள் பெரும்பாலும் தனுஷ் தந்தவைகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

42 நாட்களில் 200 மில்லியன் பார்வைகளை எட்டவைத்த ரசிகர்களுக்கும், பிரபு தேவா , நடன இயக்குநர் ஜானி மாஸ்டர், இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா , இயக்குநர் பாலாஜி மற்றும் அவரது குழுவிற்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் தன் சாதனையைத் தானே முறியடித்த தனுஷ்.

https://twitter.com/dhanushkraja/status/1095569757749661696

Comment

Successfully posted