தமிழக ஊழியரை தேடும் சச்சின் டெண்டுல்கர்

Dec 14, 2019 05:54 PM 1216

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது தனக்கு உதவிய சென்னை தாஜ் கோர மண்டல் ஊழியரை தான் தேடி வருவதாக சச்சின் டெண்டுல்கர் தனது சமூகவலைத்தளத்தில் கூறியுள்ளார்.


சென்னையில் நாளை இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஒருநாள் போட்டி நடக்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்துள்ளனர்.
`சென்னை டெஸ்ட் தொடரின்போது தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் சச்சின் டெண்டுல்கர்  தங்கி உள்ளார். அப்போது ஹோட்டலில் காபி ஆர்டர் செய்துள்ளார். காபியை ரூமுக்கு கொண்டு வந்த  ஹோட்டல் ஊழியர், சச்சினிடம் சந்தேகம் கேட்டுள்ளார். சச்சின் பேட்டிங் செய்யும் போது கையில் உள்ள எல்போ கார்டு சிரமத்தை தருவதாகவும், அதனை ரீ டிசைன் செய்தால் நன்றாக இருக்கும்" என்றும் அந்த  ஊழியர் கூறியுள்ளார்.

அதன்பிறகு சிரமத்தை புரிந்துகொண்டு சச்சின்  எல்போ கார்டை ரீ டிசைன்  செய்துள்ளார்.  இதனை தொடர்ந்து அவர், எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன என தெரிவித்து, ஊழியரை சந்திக்க ஆசைப்படுதாகவும்  கண்டுபிடிக்க அனைவரும் உதவ வேண்டும் " எனவும்  சச்சின் சமூகவலைத்தளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Comment

Successfully posted