தனது குருவின் உடலை தோளில் சுமந்து இறுதி நன்றி கடனை செலுத்திய சச்சின் டெண்டுல்கர்

Jan 03, 2019 08:00 PM 257

தனது குருவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அவரது உடலை தோளில் சுமந்து நன்றி கடனை செலுத்தினார்.


கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சிறுவயது பயிற்சியாளரான அச்ரேக்கர் வயது முதிர்வு காரணமாக காலமானார். தாதர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட சச்சின், மயானம் வரை தனது குருவில் உடலை தோளில் சுமந்தபடி நடந்து சென்று நன்றிக் கடனை செலுத்தினார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் கம்ப்ளி, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே உள்ளிட்ட பலர் அச்ரேக்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Comment

Successfully posted