விஜய் சேதுபதியுடன் நடிக்கும் சச்சின் டெண்டுல்கர்..

Aug 01, 2019 06:00 PM 701


விஜய் சேதுபதியோடு இந்திய அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது.

இலங்கையின் முன்னணி பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க உள்ளனர்.அதில் முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர் முத்தையா முரளிதரன் என்பதால் இப்படத்திற்கு ‘800’ என பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தினை ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கவுள்ளார்.இவர் ஜெய் நடிப்பில் வெளிவந்த ‘ கனிமொழி’ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படத்தினை பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான தகவலும் வெளியாகிவுள்ளது.இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர் படத்தில் சிறப்பு தோற்றமளிக்கலாம் என தகவல் வெளியாகிவுள்ளது.இது குறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் அளிக்கவில்லை.

தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் சங்கத் தமிழன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted