சேரனுக்கு எதிர்பாராத surprise கொடுத்த சாக்ஷி..

Dec 13, 2019 04:02 PM 1256


பிக்பாஸ் 3  நிகழ்ச்சியில்  16 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தாலும் போட்டியாளர்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டு தங்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவில்லை.

பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட சண்டைகளில் எந்த சண்டையாக இருந்தாலும் முதலில் நிற்பவர் சாக்ஷி.வீட்டில் போட்டியாளர்களோடு எத்தனை சண்டை போட்டாலும், வெளியே வந்த பிறகு அது அனைத்தையும் மறந்து இயக்குனர் சேரனுக்கு, சாக்ஷி எதிர்பாராத surprise ஒன்றை கொடுத்துள்ளார்.

image

நேற்று இயக்குனர் சேரனின் பிறந்தநாள்,அதனால் சாக்ஷி எதிர்பாராத நேரத்தில் அவரின் வீட்டிற்கு சென்று கேக் வெட்டி உள்ளார். மேலும் அவரோடு எடுத்து கொண்ட புகைப்படத்தையும் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் 'நமக்கு நெருக்கமாக உள்ளவர்களுக்கு தான் நாம் surprise கொடுப்போம். அதனால் நான் சேரப்பா வீட்டிற்கு சென்ற அவரின் பிறந்தநாளை கொண்டாடினேன் ' என கூறியுள்ளார்.

Comment

Successfully posted