ஹீரோவாக உருவெடுத்தார் சரவணா.. குவியும் வாழ்த்துக்கள்..

Dec 01, 2019 05:53 PM 3550

சென்னை மற்றும் பல இடங்களில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஜவுளிக்கடை என்றால் அது சரவணா ஸ்டோர்ஸ் தான். அந்த கடையின் உரிமையாளரான சரவணா சில நாட்களுக்கு முன்பு தான் நடிப்பதில் ஆர்வம் காட்டுவேன் என்று கூறியிருந்தார்.

அவர் சொன்னதைப் போலவே தற்போது ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க உள்ளார் . இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளனர்.

image

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.மேலும் இந்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார் மற்றும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு ,விவேக் ,நாசர் தம்பி ராமையா, கோவை சரளா ஆகியவர்கள் நடிக்க உள்ளனர்.

 

image

சரவணனுக்கு ஜோடியாக அறிமுக நாயகி கீர்த்திகா திவாரி நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி மற்றும் வெளிநாடுகளில் நடைபெற உள்ளதாக கூறப்படுகின்றது.

 

image

Comment

Successfully posted