பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெறவேண்டி சரஸ்வதி பூஜை

Feb 23, 2019 11:04 AM 259

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டி அரியலூரில் சரஸ்வதி பூஜை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கோடாலிகருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள்100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டி ஞானகுரு திருமூலம் அறக்கட்டளை சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து சரஸ்வதி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று இந்த ஆண்டும் முழு தேர்ச்சி பெற வேண்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சரஸ்வதிக்கு யாகம் வளர்த்து பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஞானகுரு திருமூலம் அறக்கட்டளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இதில், பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பென்சில், பேனா உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன

Comment

Successfully posted